“எல்லாத்துக்கும் பிரதமர் கூடவே வரமுடியாது”- கனடா பிரதமரை தனியாக சுற்றவிட்ட மோடி!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து இப்போது தனியாக ஒரு நாட்டின் பிரதமர் என்ற அடையாளமே இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்.
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே ஒரு வாரப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியாவுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள ட்ரூடே தனது அலுவல் ரீதியிலானப் பயணத்தில் குடும்பத்துடன் இருப்பது தனக்கு மிகவும் உற்சாகமளிப்பதாகக் கூறியுள்ளார்.
இன்று பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சபர்மதி ஆஸ்ரமம், ஐஐஎம் என இன்றைய திட்டம் குஜராத்தில் என திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், வெளிநாட்டு முக்கியத் தலைவர்கள் வரும்போது குறிப்பாக குஜராத் மாநிலத்துக்கு வந்தால் பிரதமர் மோடி உடன் வருவதுதான் வழக்கம். ஆனால் இம்முறை பிரதமர் மோடி கனடா பிரதமருடன் வரவில்லை. அரசு தரப்பில், "எல்லா நேரத்திலும் எல்லாருடனும் ஒரு நாட்டின் பிரதமரால் வர இயலாது" எனக் கூறப்பட்டுள்ளது.
You'r reading “எல்லாத்துக்கும் பிரதமர் கூடவே வரமுடியாது”- கனடா பிரதமரை தனியாக சுற்றவிட்ட மோடி! Originally posted on The Subeditor Tamil
More India News