ATM கார்டு மூலம் காப்பீடும் பெறலாம் !

Get Insurance With an ATM Card!

by Loganathan, Sep 11, 2020, 13:02 PM IST

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதனால் அதனைச் சேவை வடிவில் வழங்கும் நிறுவனங்களும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது . அனைவரும் அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதீத வேகமாக உழைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் வங்கி சேவைகள் இன்றியமையாத ஒன்றாக உருவெடுத்துள்ளது . இணைய வழி பணப் பரிமாற்றம் மற்றும் ATM கார்டுகளின் பயன்பாடு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. வங்கிகளில் வழங்கப்படும் Debite card மூலம் பண எடுப்பதைத் தவிர்த்து காப்பீட்டும் செய்ய முடியும்.

Atm card எனப்படும் Debite cardகள் மூலம் பயனாளருக்கு மருத்துவ காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு செய்யப்படும்‌ . அனைத்து வங்கிகளும் அதன் பயனாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பான காப்பீடு திட்டம் .

எந்தவிதமான படிவங்களையும் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. அந்த வங்கியின் டெபிட் கார்டை வைத்திருந்தால் போதும் . அந்த அட்டையானது தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

SBI

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியிலும் இந்த காப்பீடு உள்ளது. இந்த வங்கியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் பெயரில் டெபிட் கார்டு மூலம் இந்த காப்பீடு உறுதி செய்யப்படுகிறது. டெபிட் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் விபத்தில் இறக்க நேரிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டாலோ இந்த காப்பீட்டைப் பயன்படுத்தலாம். டெபிட் கார்டு 90 நாட்களுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இந்த காப்பீட்டைப் பெற இயலாது. டெபிட் கார்டுகளின் மதிப்பைப் பொருத்து விபத்து காப்பீடு 2 இலட்சத்தில் இருந்து 10 இலட்சம் வரை அளிக்கப்படும்.

ICICI

இந்த வங்கியில் சில்வர் டெபிட் கார்டுகள் உள்ளவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் இந்த காப்பீட்டைப் பெறலாம். ஆனால் பயனாளி குறைந்தபட்சம் ரூபாய் 499 யை ATM யை தவிர்த்து பரிமாற்றம் செய்து இருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் இந்த காப்பீட்டைப் பெற இயலாது . இந்த வங்கியில் டெபிட் கார்டுகளுக்கான காப்பீடு தொகை 5 இலட்சத்தில் இருந்து 15 இலட்சம் அளிக்கப்படும்.

AXIS BANK

90 நாட்களுக்கு விபத்து ஏற்பட்டதை வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். 6 மாதத்திற்கு மேல் டெபிட் கார்டை பயன்படுத்தாதவர்கள் இந்த காப்பீட்டைப் பெற இயலாது.

தேவைப்படும் ஆவணங்கள்
விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு

1.FIR (முதல் தகவல் அறிக்கை )
2. Spot panchanama
3. PMC
5. Death report

You'r reading ATM கார்டு மூலம் காப்பீடும் பெறலாம் ! Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை