முலாயமுக்கு உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி

சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் முலாயம்சிங் யாதவுக்கு திடீரென நேற்றிரவு(ஜூன்10) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவருமான முலாயம்சிங் யாதவுக்கு கடந்த ஞாயிறன்று திடீரென ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அன்றே வீடு திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கு நேற்றிரவு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டாக்டர்களின் அறிவுரைப்படி அவரை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து சென்றனர். நள்ளிரவில் அவரை குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
முன்னதாக, லக்னோவில் முலாயம்சிங் யாதவை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Vikravandi-Assembly-vacant-official-announcement-published
விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு... செப்டம்பரில் நாங்குனேரியுடன் இடைத் தேர்தல்?
Heatwave-increase-in-north-tamilnadu
வட தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை மக்களே
Special-teachers-protest-DPI-building
பணி நியமனம் செய்ய கோரி சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம்
Sahayam-IAS-says-gave-permanent-solution-report-for-water-crisis
'தண்ணீர் பிரச்னைக்கு 20 வருடம் முன்பே தீர்வு சொன்னேன்... யாரும் கேட்கல
Jagan-village-Electric-shock-death
ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த கிராமத்தில் நடந்த பரிதாப நிகழ்வு
Hyderabad-bar-dancer-allegedly-stripped-thrashed-for-refusing-sex-with-customers
பலான வேலைக்கு மறுத்த ‘பப்’ டான்சருக்கு அடி உதை; 4 பெண்கள் கைது, ஒருவர் ஓட்டம்
Fines-imposed-on-traders-whom-distributes-banned-plastic-things
பிளாஸ்டிக் பைகள் இருக்கிறதா? கண்காணிப்பு குழுக்கள் சோதனை
Modi-says-Active-opposition-is-important-in-parliament-democracy
வலிமையான எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்திற்கு பலம்
Edappadi-fixed-prasanth-kishore-for-2021-election-ops-followers-upset
அதிமுகவை காப்பாற்ற முன்னூறு ‘சி’ பிளான்; காப்பாற்றுவாரா பிரசாந்த்?
Minister-velumani-explain-water-crisis
தண்ணீர் தட்டுப்பாடு என்பது வதந்தி..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

Tag Clouds