சர்காரை தொடர்ந்து தர்பார் தலைவர் 167வது படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Thalaivar 167 film titled Darbar
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 167வது படத்தின் தலைப்பு தர்பார் என லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்கார் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் ரஜினிகாந்தின் 167வது படத்திற்கு தர்பார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் லீக்காகிய விஷயத்தை அறிந்த லைகா நிறுவனம் தற்போதே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விட்டது.
இந்த படத்தில், சந்திரமுகி படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் உடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். சூப்பர்ஸ்டார் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் போலீஸ் அதிகாரி என்பது முன்னமே லீக்கானது. அதனை உறுதி செய்யும் வகையில், போலீஸ் நாய், பெல்ட், லத்தி, தொப்பி, துப்பாக்கி என போஸ்டர் தெறிக்கவிடுகிறது.
You'r reading சர்காரை தொடர்ந்து தர்பார் தலைவர் 167வது படத்தின் தலைப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil
More Cinema News