தீபாவளி போட்டியில் விஜய்யுடன் மோதும் கார்த்தி, விஜய்சேதுபதி.. முந்தப்போவது யார்? .
Dewali Release new films
விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தி நடித்துள்ள கைதி, விஜய் சேதுபதி நடித்திருக்கும் சங்கத்தமிழன் என 3 படங்கள் தீபாவளி ரிலீஸ் ரேசில் உள்ளது. இப்படங்கள் ஒரே நாளில் வெளியாகுமா? அல்லது ஒன்றையொன்று முந்துமா என்று கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. அதற்கு காரணம் உள்ளது.
தீபாவளி அக்டோபர் 27ம்தேதி அன்று வருகிறது, அன்று ஞாயிற்றுகிழமை. அன்றைய தினம் படங்களை வெளியிட்டால் முதல் இரண்டு நாட்கள் அதாவது வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை வசூல் வராது. வழக்கமாக எல்லா படங்களும் வெள்ளிக்கிழமைதான் ரிலீஸ் செய்யப்படுகிறது.
அந்த பாணியை இம்முறை பின்பற்றினால் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அதாவது 25ம் தேதியே 3 படங்களும் வெளியாக வேண்டும். எந்த தயாரிப்பாளரும் 2 நாள் வசூலை இழக்க விரும்ப மாட்டார்கள். அதனால் ரிலீஸ் செய்வதில் போட்டி நிலவுகிறது.
அநேகமாக விஜயின் பிகில் தீபாவளிக்கு 3 நாள் முன்னதாக அதாவது 24ம் தேதியே ரிலீஸ் ஆகவும் வாய்ப்பிருக்கிறது. தியேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டால் மற்ற 2 படங்களில் ஏதாவது ஒரு படம் ஒரு வாரம் தள்ளி வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது. எது எப்படியோ பட்டாசுடன் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக பக்கா கமர்ஷியல் படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
You'r reading தீபாவளி போட்டியில் விஜய்யுடன் மோதும் கார்த்தி, விஜய்சேதுபதி.. முந்தப்போவது யார்? . Originally posted on The Subeditor Tamil
More Cinema News