தங்கம் விலை தொடர்ந்து உயர்வு ரூ.29 ஆயிரத்தை எட்டுகிறது

gold rate rise in peak. one gram rs.3612

by எஸ். எம். கணபதி, Aug 13, 2019, 12:40 PM IST

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, பவுன் ரூ.28,896 என்ற விலைக்கு விற்கிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், சென்னை சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில்தான் முதல் முறையாக ஒரு பவுன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. பின், ஜூனில் அது 26 ஆயிரத்தை தாண்டியது.

இதன்பின்னர், இம்மாதம் 2ம் தேதியன்று ஒரு பவுன் 27 ஆயிரம் ரூபாயையும், கடந்த 7ம் தேதியன்று 28 ஆயிரம் ரூபாயையும் தாண்டியது. சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3582, ஒரு பவுன் ரூ.28,656 என்று விலைக்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து கிராம் ரூ.3612க்கும், பவுன் ரூ.28,896க்கும் விற்கிறது. இது இன்னும் அதிகரிக்கும் என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுகையில், ‘‘இன்று மாலை அல்லது நாளை காலையில் தங்கம் சவரன் விலை ரூ.29 ஆயிரத்தை தொட்டு விடும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகமாகி விலை உயர்வதாலும் இங்கும் விலை உயர்ந்து வருகிறது’’ என்றனர்.

தங்கம் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1872 உயர்வு

You'r reading தங்கம் விலை தொடர்ந்து உயர்வு ரூ.29 ஆயிரத்தை எட்டுகிறது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை