காங்கிரசின் சாதனைகள் என்ன.. ராகுல் காந்திக்கு ஜவடேகர் பதில் கிண்டல்..
Rahul Gandhi, note your achievements, shotback Union minister Prakash Javadekar.
மத்திய அரசின் சாதனைகள் என்று ராகுல்காந்தி கிண்டலடித்ததற்கு, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் ட்விட் போட்டு அவரை கிண்டலடித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருந்ததாவது:கொரோனா காலத்தில் மத்திய அரசு புரிந்த சாதனைகள் என்ன தெரியுமா..,பிப்ரவரி--நமஸ்தே டிரம்ப், மார்ச்--மத்தியப் பிரதேச அரசைக் கவிழ்த்தது, ஏப்ரல்--எல்லோரையும் மெழுகுவர்த்தி ஏற்ற வைத்தது, மே-- மோடி அரசின் 6வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன்-- பீகாரில் ஆன்லைன் பேரணி, ஜூலை--ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி.இவ்வாறு ராகுல்காந்தி கிண்டலடித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டார். அதில், ராகுல்காந்தி உங்களது சாதனைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்..பிப்ரவரி --ஷாகீன்பாக் & கலவரம், மார்ச்- சிந்தியாவையும், ம.பி. அரசையும் இழந்தது, ஏப்ரல் - தொழிலாளர்களைத் தூண்டியது, மே - காங்கிரஸ் தோல்வியின் 6வது ஆண்டு, ஜூன்-- சீனாவுக்கு ஆதரவாகப் பேசியது, ஜூலை-- ராஜஸ்தானில் காங்கிரசை அழித்தது.இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் பதிலுக்குக் கிண்டலடித்துள்ளார்.
You'r reading காங்கிரசின் சாதனைகள் என்ன.. ராகுல் காந்திக்கு ஜவடேகர் பதில் கிண்டல்.. Originally posted on The Subeditor Tamil
More India News