தோனிக்கு வயது தடையில்லை உலகக் கோப்பைக்கு பின்னரும் ஆட்டத்தை தொடர வேண்டும் - கங்குலி கருத்து

Ganguly says Dhoni wont retire after world cup

by Nagaraj, Mar 7, 2019, 20:23 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் தோனிக்கு 37 வயதானாலும், வயது ஒன்றும் அவருக்குத் தடையில்லை. உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பின்னரும் இந்திய அணிக்காக தோனி விளையாட வேண்டும் என முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி கூறியுள்ளார்.

டெஸ்ட், ஒரு நாள் , டி20 என மூன்று வித போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த தோனி தற்போது ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்கிலும் தோனி படைத்த சாதனைகள் எண்ணிலடங்காது.

இடையில் சில போட்டிகளில் சொதப்பினாலும் இந்த 2019-ம் ஆண்டு தோனிக்கு சாதனை ஆண்டாகவே அமைந்துள்ளது. ஆஸ்திரேலியா தொடர் ல் தொடர்ந்து 3 போட்டிகளிலும் சதமடித்து தொடரை வெல்ல காரணமாகவும் இருந்து தொடர் நாயகன் விருதையும் பெற்றார். தொடர்ந்து நியூசிலாந்து தொடரிலும் கலக்கினார்.

தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியாவுடன் ஐதராபாத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியிலும் அரைசதம் கடந்து திறமையை வெளிப்படுத்தினார். 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணியை மீட்டு எப்போதும் நான் பினி சிங் மன்னன் என்பதை நிரூபித்தார்.

இந்நிலையில் 37 வயதான தோனி, வரும் உலகக் கோப்பை போட்டித் தொடருடன் ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்குள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, தோனி இப்போதும் நல்ல பார்மில் உள்ளார். உடல் தகுதியும் உள்ள போது வயது ஒன்றும் தடையில்லை. உலகக் கோப்பைத் தொடருக்கு பின்னரும் அவருடைய ஆட்டத்தை தொடர வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.

You'r reading தோனிக்கு வயது தடையில்லை உலகக் கோப்பைக்கு பின்னரும் ஆட்டத்தை தொடர வேண்டும் - கங்குலி கருத்து Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை