டிவியில் பயன்படுத்தலாம்: கூகுள் டியோ

google dio on tv

by SAM ASIR, Aug 29, 2020, 14:44 PM IST

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய பீட்டா (Beta) விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் டியோவை (Google Duo) பயன்படுத்தி ஒருவரோடு ஒருவர் அழைப்பு மற்றும் குழு அழைப்புகளைத் தொலைக்காட்சி மூலம் செய்ய முடியும். டி.வியில் உள்கட்டமைப்பு காமிரா இல்லாத பட்சத்தில் எளிதாக யுஎஸ்பி காமிராவை பயன்படுத்தலாம். டி.வியை தவிர, Nest Hub Maxலும் டியோ மற்றும் கூகுள் மீட் ஆகியவை செயல்படும்.வரும் நாள்களில் வீடியோ அழைப்பு என்பது தவிர்க்க இயலாததாகிவிடும். ஆகவே, இதுபோன்ற வசதிகள் அத்தியாவசியமானவை என்று கூறப்படுகிறது.

அதிக நேரம் நீடிக்கக்கூடிய கூட்டங்களில் மடிக்கணினி (லேப்டாப்) மற்றும் போன்கள் மூலம் பங்கேற்கும்போது, நாம் பார்வையாளராக மட்டும் இருக்கும் பட்சத்தில் நடப்பவற்றைக் கவனித்துக்கொண்டே வேறு வேலைகளைச் செய்வதற்கு இந்த வசதி உதவும். டி.வியில் கூகுள் மீட்டை Cast வசதி மூலம் பயன்படுத்தும்போது கருத்தரங்கு அல்லது கூட்டத்தில் நடப்பவற்றை எளிதாகக் கவனிக்க முடியும்.

பெரிய திரைகளில் மாணவ மாணவியர் தங்கள் வகுப்பு தோழர், தோழியரைப் பார்ப்பது இனிய அனுபவமாக அமையும். Acer Chromebase மற்றும் ASUS Remote Meet Kit ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது வீட்டிலிருந்து பணியாற்றும் உணர்வு மாறி, வீட்டையே அலுவலகமாக மாற்றியதாக உணர முடியும்.கூகுள் மீட் தானாகவே கூகுள் காலண்டருடன் இணைவதால் அந்தந்த நாளுக்குரிய கூட்டங்களில் பங்கேற்பது மிகவும் எளிதாகி விடும்.

You'r reading டிவியில் பயன்படுத்தலாம்: கூகுள் டியோ Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை