இதய ஆரோக்கியத்திற்கான உணவு மூளைக்கும் நல்லது

இளமையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நடுத்தர வயதிற்கு மேல் மூளையின் சிந்திக்கும் திறன் நன்றாக இருப்பதற்கு காரணமாகிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. 

இளம் வயதான 25 மற்றும் 32 ஆகிய வரம்பை சேர்ந்தவர்கள், நடுத்தர வயதான 45 வரம்பை சேர்ந்தவர்களின் உணவு பழக்கத்தையும், அதே உணவை உட்கொண்ட 50 மற்றும் 55 வயதைக் கொண்டவர்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மத்திய தரைக்கடல் உணவு பழக்கம் என்ற வகை உணவை சாப்பிட்டவர்களுக்கு முதுமையிலும் நல்ல சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன் இருப்பதாக நரம்பியல் நிபுணர்களின் ஆய்வு தெரிவிப்பதாக 'நியூயார்க் டைம்ஸ்' என்ற அமெரிக்க இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய தரைக்கடல் உணவு பழக்கத்தின்படி, காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், நட்ஸ் என்னும் கொட்டை வகைகள், மீன் போன்ற கடல்சார் உணவுகள், கீரை வகைகளை தாராளமாக உண்ணலாம். 

கோழி, முட்டை, பாலாடைக்கட்டி, யோகர்ட் என்னும் நிலைப்படுத்தப்பட்ட, சுவையூட்டப்பட்ட தயிர் ஆகியவற்றை மிதமாக உண்ணலாம்.

ஆடு, மாடு போன்ற கால்நடை இறைச்சிகளை எப்போதாவது உண்ணலாம்.

சர்க்கரை மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானம், ஐஸ்கிரீம் போன்ற பொருள்கள், ரீஃபைண்ட் ஆயில் என்னும் சுத்திகரிக்கப்பட்ட  எண்ணெய், ரீஃபைண்ட் தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல; உள்ளத்தின் ஆரோக்கியத்திற்கும் உணவே காரணம். ஆகவே, என்ன உண்கிறோம் என்பதில் கவனம் தேவை.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email