ஐடி துறை உங்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் அல்வா கொடுக்கும்.. பணி இழப்பை எதிர்கொள்வது எப்படி?

dont believe IT industry.. How to face job loss problem?

by Manjula, Oct 31, 2018, 12:48 PM IST

ஐடி நிறுவனத்தில் பணிபுரிய ஆசைப்படும் இளைஞர்களுக்கு ஒரு ஏச்சரிக்கை பதிவு.

நீண்ட காலம் பணிபுரிய விரும்புகிறர்வர்களுக்கு ஐடி துறை ஏற்றது அல்ல.குறிப்பாக இந்த துறையில் நீங்கள் அதி புத்திசாலியாகவும் , திறமையானவராகவும் மேலும் உயரிய பதவி வகித்தாலும் நாற்பத்தைந்து வயதில் நிறுவனத்தால் வெளியேற்றப்படுவது வாடிக்கையாகவுள்ளது. உதாரணமாக சமீபத்தில் சில முன்னணி ஐ டி நிறுவனங்கள் இருநூறுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு கட்டாய ஒய்வு அளித்ததை நினைவு படுத்தி கொள்ளுங்கள் .

மாதமொன்றுக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை ஊதியம் பெற்று கொண்டிருப்பீர்கள். நாற்பத்தைந்து வயதில் உங்களுடைய சேமிப்பு ஒன்று அல்லது இரண்டு கோடியாக இருக்கும் பட்சத்தில் எல்லா சூழ்நிலைகளும் சாதகமாக இருக்கும் (உங்கள் பெற்றோர் சொத்துக்கள் மற்றும் குடும்ப ஆதரவை தவிர்த்து )

ஆனாலும் இதுதான் மிக சவாலான காலகட்டம். இந்த வயதில் (45 +) உங்கள் குடும்பத்தின் உண்மையான மற்றும் நியாயமான செலவுகள் தொடங்கும்.பத்து முதல் பனிரெண்டு வயது நிரம்பிய குழந்தைகளின் பள்ளி படிப்பு, தாய் தந்தையரின் மருத்துவ செலவு மற்றும் குடும்ப சுற்றுலா செலவு என செலவுகள் சுடும். இந்த நேரத்தில் தான் உங்கள் நிறுவனத்தால் கட்டாய ஒய்வுக்கு தள்ளப்படுவீர்கள் அதோடு மட்டுமல்லாமல் பிற நிறுவனத்தில் புதிய வேலையை பெறுவது மிக கடினமான இமர்பாடான வகையில் இருக்கும்.


இன்றைய இளைய தலைமுறைக்கு மேற்சொன்ன கூற்றுகளில் பெரும்பாலும் உடன்பாடு இருக்காது எனென்றால் அவர்கள் தற்பொழுது 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருட ஊதியமாக பெறுகிறார்கள். அவர்களின் கனவு ஐம்பது லட்சத்தை வருட ஊதியமாக பெறுவதை பற்றியும் வெளிநாட்டு வாய்ப்பு எப்பொழுது வரும் என்பதை பற்றியே சுழலுகிறது. ஒரு கெளரவமான ஓய்வூதிய எதிர்காலத்திற்கு 5 கோடிக்கும் மேலான சேமிப்பு உங்களுக்குத் அவசியம் தேவைப்படும்.ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் நம் இளைய தலைமுறை தனது காதலரோடு இணைந்து வாழும் உறவில் (லிவிங் டுகெதர் ) ஈடுபட்டு புனே, ஹைதராபாத், சென்னை , பெங்களூர் போன்ற நகரங்களில் வீட்டு மனை மற்றும் வாகனம் வாங்கி 35 வயதில்தான் திருமண பந்தத்தில் இணைகிறார்கள்.வாழ்க்கை ரம்மியமாக ஆரம்பமாகிறது.

குடும்ப வாழ்க்கையை தொடங்கிய பத்தாண்டுகளில் குறிப்பாக நாற்பத்தைந்து வயதை அடையும் போது கட்டாய ஒய்வுக்கு தள்ளப்படுகிறார்கள்.

இப்போதுதான் மிகவும் மோசமான காலக்கட்டம் தொடங்கும் வேலையில்லை... நாற்பத்தைந்து வயதில் ஒய்வு, பிள்ளைகள் வளரும் தருணம்.செலவிற்காக உங்களது வீட்டை விற்றாலும் பழைய வீட்டின் மதிப்புக்கான பணம் தான் கிடைக்கும். புதிதாக வீடு வாங்கலாம் என்றால் வீட்டின் மதிப்பு இரட்டிப்பாக உயர்ந்திருக்கும். பல நண்பர்கள் ஏதாவது தொழில் செய்ய அறிவுறை செய்வார்கள், ஆனால் நம் இந்தியாவில் தொழில் போட்டியில் ஜெயிப்பது எட்டாக்கனிதான்.தொழிலில் போட்ட முதலீடை எடுப்பது மிக கடினம்.மேலும் ஐம்பது சதவீத மக்கள் பெருமைக்காக சொந்த நிறுவனம் திறக்கும் பாணி பரவலாகியுள்ளது. இம் முயற்சி பிரச்சனைகளை இன்னும் அதிகமாக்கும். உங்களது சேமிப்பு பணத்தை அனுபவமில்லாத துறையில் முதலீடு செய்து சோதனையில் இறங்க வேண்டாம். இந்த அறிவுறைகள் ஐடி துறையை தேர்ந்தெடுத்து நாற்பத்தைந்து வயதை கடந்தவர்களுக்கு மட்டும்.

இளைய தலைமுறைக்காண ஆலோசனை என்னவென்றால், இந்த சவாலான துறையில் நுழைவதற்கு முன்பே உங்களது முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.

இது ஒரு நிலையான பணியல்ல, மாறாக இந்திய சமுதாய மனப்பான்மைக்கு பொருத்தமற்ற பணி என்பதை பலர் உணர்ந்துள்ளனர். சம்பளம் மற்றும் வருவாய் கணீசமாக இருந்தாலும் கூட, இந்திய சமுதாயத்தில் மற்ற துறைகளில் ஸ்திரத்தன்மை இருக்கும் ஆனால் ஐடி துறையில் பணி நிரந்தரம் இல்லை.மேலும் நீங்கள் ஐடி துறையில் இருந்தால் ஸ்மார்ட்டானா பணியாளாராகவும் அலுவலக அரசியலை புரிந்து கொள்ளும் புத்திசாலியாகவும் இருக்க வேண்டும் .இரவு பகல் உழைப்பதை விட ஸ்மார்ட்டாக உழைக்க வேண்டும். இளம் வயதிலே சேமிக்கும் பழக்கம் இருக்கவேண்டும்.அலுவலக அரசியலை ஸ்மார்டாக கையாள வேண்டும்.

இந்தியாவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் பன்னாட்டு நிறுவன ஆட்சேர்ப்புக்கான எந்தவிதமான கொள்கைகளும் கட்டமைக்கப்படவில்லை, மக்கள் தகுதி அடிப்படையில் நேர்காணல்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் வயது காரணமாக நிராகரிக்கப்படுவது கசப்பான உண்மைதான்.

எனவே இறுதியாக நன்றாக யோசியுங்கள் 1998 முதல் 2010 வரை ஐடி துறைக்கான பொற்காலம் அது மீண்டும் வராது .மேலும் 7- 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அடிப்படை சம்பள கட்டமைப்பு கூட சில நிறுவனங்களில் கீழே போய்விட்டது.வசதியான குடும்ப பின்னணியில்லையென்றாலோ அல்லது நீங்கள் சராசரி மாணாவராகவோ மற்றும் புத்திசாலியாக இல்லையென்றாலோ தயவு செய்து ஐ டி துறையை தேர்ந்தெடுக்காதீர்கள்.

ஒரு சில குடும்பங்களில் ஐடி துறை சார்ந்த படிப்புக்காக கடன் வாங்குவதால் குழந்தைகளுக்கு சில நேரங்களில் வெற்றி கிடைக்காது பல நேரங்களில் கடனால் நிலைமை மோசமாகிவிடும்.மீண்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள் , மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம் உங்கள் மனநிலை,குணம் மற்றும் விருப்பமும் ஆர்வமும் என்னவென்று பாருங்கள். உங்களுக்கு ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுங்கள்.

ஐடி துறையை தேர்ந்தெடுத்துவிட்டால் அதற்கான சவால்களை எதிர்கொள்ள தயராக வாருங்கள்.

You'r reading ஐடி துறை உங்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் அல்வா கொடுக்கும்.. பணி இழப்பை எதிர்கொள்வது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை