முதல் இடத்தில் இந்தியா..கேரளாவும் ஒரு காரணம் –உலக வங்கி

India highest recipient of remittances says World Bank report

by Suganya P, Apr 9, 2019, 12:26 PM IST

வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பணம் அனுப்பும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்  தங்கள் நாட்டில் வாழும்  உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது வழக்கம். அந்த வகையில், உலக நாடுகளில் வாழும் இந்தியர்களால் கடந்த 2018ல் மட்டும், இந்தியாவுக்கு 79 பில்லியன் டாலர் அளவில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால், கடவுளின் தேசம் கண்ணீரிலும் தண்ணீரிலும் தத்தளித்தது. மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சுமார் 483 பேர்  உயிரிழந்தனர். கேரளாவைப்  புரட்டிப் போட்ட வலராறு காணாத வெள்ளம் உலக நாடுகளின் உதவிக் கரங்களை நீட்டச் செய்தது. கேரளாவும் வெள்ளத்தில் இருந்து மீண்டு புத்துயிர் பெற்றுவிட்டது. கேரளா வெள்ளத்தின் போது, இந்தியாவுக்கு அதிகளவில் பணம் அனுப்பப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து அதிக பணப்பரிமாற்றம் செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.

இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட தகவலில்,’ 2018ல், 79 பில்லியன் டாலர் அளவில் இந்தியாவிற்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த 2017ல் 65.3 பில்லியன் டாலர் அளவில் இருந்தது. கேளாரா வெள்ள பாதிப்பை அடுத்து இந்த ஏற்றம்.  இந்தியாவைத்  தொடர்ந்து,  சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுங்கள் அடுத்த அடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. 

 

பாசக்கார இந்தியர்கள்.. தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம்!

You'r reading முதல் இடத்தில் இந்தியா..கேரளாவும் ஒரு காரணம் –உலக வங்கி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை