Recent News

no-recent-talks-between-modi-and-trump-over-the-china-issue

சீன விவகாரம் பற்றி மோடியுடன் டிரம்ப் பேசவே இல்லை..

பிரதமர் மோடியுடன் சீன விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசவே இல்லை என்று இந்திய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் பங்காங் ஏரி அருகே இந்தியாவின் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. கடைசி ராணுவ முகாம் உள்ள கரகாம்பாஸ் பகுதிக்குச் செல்லும் பாதையில் ஒரு பாலம் கட்டும் பணியும் நடைபெறுகிறது.

May 29, 2020, 12:11 PM IST

total-number-of-cases-in-india-rises-to-1-65-lakh

இந்தியாவில் ஒரே நாளில் 7466 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65,799 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 4706 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 6535 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

May 29, 2020, 12:08 PM IST

pm-modi-not-in-good-mood-over-china-standoff-says-trump

சீன விவகாரத்தால் மோடி கவலையில் இருப்பதாக டிரம்ப் பேச்சு..

சீனாவுடன் எல்லைப் பிரச்சனை காரணமாகப் பிரதமர் மோடி நல்ல மனநிலையில் இல்லை என்று டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார்.கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து வருகிறது.

May 29, 2020, 12:06 PM IST

covid19-cases-in-tamilnadu-rises-to-19372

தமிழகத்தில் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தினமும் புதிதாக 700 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது.

May 29, 2020, 12:02 PM IST

railways-spreading-corona-to-bengal-says-mamata-banerjee

ரயில் மூலம் கொரோனாவை மேற்கு வங்கத்திற்குப் பரப்புவதா? மத்திய அரசு மீது மம்தா பாய்ச்சல்..

மகாராஷ்டிராவிலிருந்து ஒரே நேரத்தில் 36 ரயில்களை அனுப்பி, மேற்கு வங்கத்திற்கு கொரோனாவை பரப்ப பியூஸ் கோயல் முயற்சிக்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அமித்ஷாவையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் இது வரை கொரோனாவால் 4192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

May 28, 2020, 09:04 AM IST


trump-offers-to-mediate-bedween-india-china

இந்தியா-சீனா பிரச்சனையில் அமெரிக்கா உதவத் தயார் அதிபர் டிரம்ப் பேச்சு..

இந்தியா, சீனா இடையே எழுந்துள்ள எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே சீனா திடீரென படைகளைக் குவித்து வருகிறது.

May 28, 2020, 09:01 AM IST

all-schools-and-colleges-in-west-bengal-will-remain-closed-till-june-30

மேற்கு வங்கத்தில் பள்ளி, கல்லூரிகள் ஜூன் 30 வரை மூடல்..

மேற்குவங்கத்தில் ஜூன் 30ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக, பிரதமர் மோடி அறிவிப்பின்படி நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

May 28, 2020, 08:58 AM IST

40-new-covid19-cases-reported-in-kerala

கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல்.. புதிய கட்டுப்பாடுகள்..

கேரளாவில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் முதன் முதலாகக் கேரளா மாநிலத்திற்குள்தான் இந்நோய் பரவியது.

May 28, 2020, 08:55 AM IST

covid19-cases-in-tamilnadu-rises-to-18-545

சென்னையில் வேகமாக பரவும் கொரோனா.. 12 ஆயிரம் பேருக்குப் பாதிப்பு..

தமிழகத்தில் நேற்று மட்டும் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், சென்னையில் மட்டும் 558 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. இது வரை ஒன்றே கால் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4200 பேர் பலியாகியுள்ளனர்.

May 28, 2020, 08:52 AM IST

tirupati-devasthanam-resumes-tirupati-laddu-prasadam-sales-today

திருப்பதி கோயில் லட்டு விற்பனை மீண்டும் துவங்கியது.. ஜூன் 1ல் கோயில் நடை திறப்பு..

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜூன் 1ல் திறக்கப்பட உள்ள நிலையில், திருப்பதி லட்டு விற்பனை மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அது நீட்டிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி முடிவடைகிறது.

May 27, 2020, 14:57 PM IST